புலிகள் காப்பகம், மாஞ்சோலை பகுதிகளில் சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை மூலமாக சுற்றுல வாகனம் அறிமுகம்

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 15:21

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் மாஞ்சோலை பகுதிகளில் சூழல்  சுற்றுலா செல்ல வனத்துறை மூலமாக சுற்றுல வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் மணிமுத்தாறு அருவிக்கு மேல் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ளது. மாஞ்சோலை என்பது சுற்றுலா தலம் அல்ல . இது புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதி என்பதால் இங்கு யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில்  சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் உள்ளது .

இந்த பகுதிகளை காண வனத்துறை அனுமதி வழங்கி வனத்துறை சார்பில் வாகனமும் ஏற்பாடு செய்துள்ளது. சூழல் சுற்றுலா தொடக்க நிகழ்வில்  மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் இருந்து  சுற்றுலா வாகனம் புறப்பட்டது.  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக  கள இயக்குநர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி தொடங்கி வைத்தார்.

மாஞ்சோலை செல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய இயலாத சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக  

இந்த வாகனம், அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 4 மணி வரை ஒருமுறை மட்டும்  இயக்கப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பின்னர் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் என இரு முறை இயக்கப்படுகிறது.

மணிமுத்தாறு பேருந்து நிலையத்தில் இருந்து  புறப்படும் இந்த வாகனத்தில் செல்ல முன் அனுமதி தேவையில்லை. முதலில் வரும் 25 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு நபருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.350, சிறுவர்களுக்கு ரூ.125. Still camera வுக்கு 50 ரூபாய் கட்டணமும் Handy Camera, Video Camera கொண்டு வருபவர்களுக்கு ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.