வ.உ.சி.யின் 150வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி கல்லூரி மாணவர்களிடையே சிறப்பு மாரத்தன் போட்டி

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2021 15:22

தூத்துக்குடி

வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் வ.உ.சி. கலைக்கல்லூரி சார்பில் சிறப்பு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மாரத்தன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கனிமொழி எம்பி., பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.. 

இன்று தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரி சார்பில் நடைபெற்ற வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்தநாள் சிறப்பு மாரத்தான் போட்டியை கனிமொழி எம்பி., மற்றும் எம்எல்ஏ கீதா ஜீவன் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்தநாள் நினைவு மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கனிமொழி எம்பி., அவர்களுடன் பரிசுகள் வழங்கி கவுரவித்தார் எம்எல்ஏ கீதாஜீவன்.  உடன் கல்லூரி தலைவர் APCV. சொக்கலிங்கம் மற்றும் APCV. சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.