டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 06 அக்டோபர் 2021 15:16

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியரை சமூக விரோதிகள் கொலை செய்ததை கண்டித்து தஞ்சையில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம்பகுதி டாஸ்மாக் கடை விற்பனையாளரான மாற்றுத்திறனாளி துளசிதாஸ் சமூக விரோதிகளால் கடை வாசலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். விற்பனையாளர் ராமு காயமடைந்தார்.இந்த சம்பவத்தை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு பணியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் துளசிதாஸ் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.