காயல்பட்டினத்தில் ஸலவாத் சமர்ப்பண விழா

பதிவு செய்த நாள் : 03 அக்டோபர் 2021 13:44

காயல்பட்டினம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதப்பட்ட 100 கோடி ஸலவாத் சமர்ப்பணம் செய்யும் விழா தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ஜீலானி பள்ளிவாசலில் நேற்று (2-10-2021) நடைபெற்றது.

லெப்பையப்பா பண்ணை தலைவரும் - ஜீலானி பள்ளியின் முத்தவல்லியுமான எஸ்.எச். ரஹ்மத்துல்லாஹ் இவ்விழாவுக்கு தலைமை தாங்கினார். என்.எம்.எச். செய்யித் முஹம்மத் புகாரீ உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பீ.எஸ்.ஜே. ஹுஸைன் முஸ்தபா கிராஅத் ஓதினார். எஸ்.எம். முஹம்மத் ஷமீம் கீதம் பாடினார். எழுத்தாளர் காயல் எம்.ஒய். ஜெஸ்முதீன் வரவேற்புரை ஆற்றினார்.

காயல்பட்டினம் மஹ்ழரி அரபிக் கல்லூரியின் பேராசிரியர்களான

 மவ்லவீ ஹாபிழ் எம். முஹம்மத் அன்வரி துவக்க உரையாற்ற, ஏ.கே. முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரபீ சிறப்புரையாற்றினார்.

மன்னர் அப்துல்லாஹ் மஹ்ழரீ நன்றி கூற, ஹாபிழ் எஸ். முஹம்மத் ஷா மஹ்ழரீ துஆவுடன் விழா நிறைவுற்றது.

காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்விழாவில் திரளாகக் கலந்து கொண்டனர்.

மகளிருக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (எஸ்.எஸ்.எப்) மஸ்ஜித் ஜீலானி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.