காரியாபட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில், சூறைக்காற்றுடன் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 19:55

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று மாலை, பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்துவந்த நிலையில், இரண்டு நாட்களாக மேகங்கள் திரண்டு வந்தும் மழை பெய்யாமல் இருந்தது.

 இந்த நிலையில் இன்று காலையிலிருந்து கடுமையான வெயில் அடித்துவந்த நிலையில், மதியம் முதல் மேகக்கூட்டம் திரண்டது. மாலையில் லேசான சாரலுடன் பெய்யத்துவங்கி, சற்று நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. தற்போதைய மழை மானாவாரி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் காரியாபட்டி பகுதியில் பெய்த மழை, அந்தப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.