டெல்லியில் பெண் காவலர் படுகாெலையை கண்டித்து மேலப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 19:50

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து  மேலப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சி  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  திரளானோர்  பங்கேற்றனர்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர்  சபியா  படுகொலைக்கு நீதி கேட்டும்,  குற்றவாளிகளை கைது செய்யாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கண்டித்தும் , குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்  நெல்லை மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் மண்டல தலைவர் ரசூல் மைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில்  முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு  கண்டன உரையாற்றி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்குமார்   உள்பட  திரளானோர்  கலந்து கொண்டனர்.