நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 19:49

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேலாயுதம் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது   சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில்  வந்துகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 30 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது வாகன ஓட்டுநர் புது குடியைச் சேர்ந்த அஜித் என்பவரை பிடித்து விசாரிக்கும் போது அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை அம்பாசமுத்திரம் காவல்துறையினர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். வாகனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர்.