சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் தாய், மகன் பலி

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 19:48

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் தாய் மற்றும் மகன் ஆகிய இருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (35) அவர் மற்றும் அவரது தாய் முத்துலட்சுமி  முருகனின் 3 வயது மகன் ஆகிய மூவரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது சங்கரன்கோவில் அருகே உள்ள அவனிக்கோனந்தல் விலக்கு பகுதி அருகே வந்து போது  இரு சக்கர வாகனமானது நிலை தடுமாறி எதிர்பாரத விதமாக சாலையில் ஓரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

 விபத்தில் முத்துலட்சுமி இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகனை மீட்டு குருவிகுளம் காவல் துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் முருகனின் மகன் 3 வயது சிறுவன் காயங்களுடன் உயிர் பிழைத்தார்  இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி தாயும் மகனும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.