ராஜபாளையத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா; திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 19:36

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில், நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு, நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

 தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக கட்சியின் ராஜபாளையம் நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.