வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 19:36

மதுரையில் வியாபாரியிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பெண் காவல் ஆய்வாளர்  வசந்தியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மீண்டும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல்நிலைய காவல் ஆய்வாளர் வசந்தி சிவகங்கை  மாவட்டத்தை சேர்ந்த அர்ஷத் என்ற வணிகரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்ததாக கடந்த ஆகஸ்ட்  26ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.

காவல் ஆய்வாளர் வசந்தி தரப்பில் ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த 15ம் தேதி நடைபெற்ற நிலையில் மனு மீதான விசாரணையை இன்று  ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று விசாரணை நடத்திய  நீதிபதி மனு மீதான விசாரணையை மீண்டும் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.