வங்கதேச இளம்பெண்ணுக்கு நவீன நரம்பியல் ஆபரேஷன் சென்னையில் வெற்றிகரமாக நடந்தது

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 16:10

சென்னை

சென்னையின்  எம்ஜிஎம் ஹெல்த்கேர்,  வங்கதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு நரம்பு மண்டலத்தில் சி.டி வழிகாட்டுதலுடன் கூடிய மினிமல் இன்வேசிவ் எனப்படும் உடலில் பெரிய காயம் ஏற்படுத்தாமல் மிகச் சிறிய அளவில் துளையிட்டு செய்யப்படும் சிகிச்சை முறையை வெற்றிகரமாக செய்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஷூலி கோல்டர் கடந்த 9 ஆண்டுகளாக கழுத்து மற்றும் தலையின் இடதுபுறத்தில் கடுமையான வலியால் அவதிப்பட்டார்

“தீர்க்க முடியாத வலியிலிருந்து விடுபட வங்கதேசத்தின் நாட மருத்துவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள நிபுணர்களைத் தேடிச் சென்றார். பல ஸ்கேன் எடுத்துபல முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எதுவும் அவருக்கு பலன் அளிக்கவில்லை. கடைசியில் அவர் நோய் கண்டறிதல் மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

அவருக்கு உயர் தெளிவான காட்சிகளை (ஹை ரெசல்யூஷன்) வெளிப்படுத்தும் எம்ஆர் நியூரோகிராபி உடன் கூடிய 3டி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் இடது கழுத்து சி2 பகுதியிலிருந்து வலி வெளிப்படுவதைக் கண்டறிந்து, ஸ்கேன் பரிசோதனை மூலம் பிரச்னை எந்த இடத்திலிருந்து வெளிப்படுகிறது என்பதை தெளிவாகக் கண்டறிந்த பிறகு அதை சரி செய்வதற்கான சிகிச்சை முறையைப் பற்றி டாக்டர்கள் திட்டமிட்டனர் அவருக்கு வலியை ஏற்படுத்தும் நரம்பு இழையை அழிப்பது ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர் டாக்டர்கள்,  உடலில் கழுத்து பகுதியின் அமைப்பு மிகவும் சிக்கலானது. மிகவும் முக்கிய ரத்த நாளங்கள், நரம்பு இழைகள் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய இடத்துக்கு மிக அருகில் செல்கின்றன.

எனவே, ஆபத்தான இடத்தில் அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் நோயாளிக்கு உடல் பகுதிகள் செயலிழப்பு அல்லது உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சையை திட்டமிட்டனர்எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இந்த பிரச்னையை எதிர்கொள்ள அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் அதைப் பயன்படுத்த சிறந்த அனுபவமிக்க நிபுணர்கள் இருந்ததால், ஓப்பன் அறுவைசிகிச்சை செய்வதற்கு பதில் அந்த நோயாளிக்கு மிகச் சிறிய துளை மூலம் சிகிச்சை செயல்முறையை மேற்கொள்ளப்பட்டதுமிகச் சிறந்த அனுபவம் கொண்ட இன்ட்ரவென்ஷனல் ரேடியாலஜி நிபுணர் குழு உதவியோடு சிடி வழிகாட்டுதலுடன் கூடிய ரேடியோ ஃப்ரீக்குவன்ஸி அபலேஷன் சிகிச்சை திட்டமிடப்பட்டது”

இந்த நோயாளிக்கு மிக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், இதன் மூலம் வாழ்நாள் முழுக்க இந்த வலி பிரச்னையில் இருந்து விடுபட்டுள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிகிச்சை பெற்ற நோயாளி கூறுகையில்,

“எனக்கு புது வாழ்வு அளித்தமைக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேரின் டாக்டர் கே. ஶ்ரீதர் தலைமையிலான க்ளீனிக்கல் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சோதனையான காலத்தில் எனக்கு எந்த சோர்வும் இன்றி சேவையாற்றிய செவிலியர் குழுவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்