பொதுவுடமை இயக்க போராளித்தலைவர் ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள் – தமிழக அரசு சார்பில் மலர்மரியாதை

பதிவு செய்த நாள் : 21 ஆகஸ்ட் 2021 14:00

சென்னை

பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள மணிமண்டபதில் தமிழக அரசு சார்பாக மாலை அணிவித்து எம்எல்ஏ மனோ தங்கராஜ் மரியாதை செலுத்தினார்.

பொதுவுடமை இயக்க போராளித்தலைவர் ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள்.

1907ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே நாளில் தான் ஜீவா பிறந்தார். நாற்பது ஆண்டுகள் பொதுவாழ்வில் சேவையாற்றிய ஜீவா, பத்தாண்டுகள் சிறைவாசமிருந்தார்.

சென்னை மாகாண சபைக்கு 1952 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் கம்யூனிஸட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜீவா, தமிழ் இலக்கியங்களை கரைத்து குடித்தவர். முதன்முதலாக சட்டசபையில் தமிழில் பேசி தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர்