சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சுவிரட்டு போட்டி - 100க்கும் மேற்பட்டவர்கள் காயம்.

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 21:26

 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பங்குனி பொங்கலை முன்னிட்டு கிராமத்து இளைஞர்கள் சார்பாக  இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

       இந்த மஞ்சுவிரட்டு போட்டியில்  சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி,   மதுரை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சிங்கம்புணரி கிராமத்தின் சார்பாக அனைத்து மாடுகளுக்கு வேட்டி துண்டு அணிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

 பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் விரட்டி சென்று அடக்கினர். இதில்  மாடுகள் முட்டியதில் 100க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.  இளவட்ட மஞ்சுவிரட்டு விழாவை  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.