விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 73.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்சுழி தொகுதியிலும், குறைந்த பட்சமாக சிவகாசி தொகுதியிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் திருச்சுழி தொகுதியில் 77.44 சதவிகிதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்தது. 2வது இடத்தை 75.58 சதவிகித வாக்குப்பதிவுடன் அருப்புக்கோட்டை தொகுதியும், 3வது இடத்தை 75.16 சதவிகித வாக்குப்பதிவுடன் சாத்தூர் தொகுதியும், 4வது இடத்தை 73.86 சதவிகித வாக்குப்பதிவுடன் ராஜபாளையம் தொகுதியும், 5வது இடத்தை 73.03 சதவிகித வாக்குப்பதிவுடன் திருவில்லிபுத்தூர் தொகுதியும், 6வது இடத்தை 71.03 சதவிகித வாக்குப்பதிவுடன் விருதுநகர் தொகுதியும், 7வது இடத்தை 70 சதவிகித வாக்குப்பதிவுடன் சிவகாசி தொகுதியும் பிடித்துள்ளன. ஒட்டு மொத்தமாக விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 73.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.