நெல்லை மாவட்ட வாக்குபதிவு எந்திரங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 16:57

நெல்லை மாவட்டத்தில் வாக்கு  பதிவு சதவீதம் குறையவில்லை. கடந்த 2016ம் ஆண்டு பதிவான வாக்கு சதவீதத்தில் அளவே இந்த முறையும் பதிவாகி உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

 வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் , வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டது. 5 சட்டமன்ற தொகுதிக்கும் அமைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாகங மூடி சீல் வைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளிலும்  66.54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 9 லட்சத்து 3 ஆயிரத்து 770 பேர் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளனர் , சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் நெல்லை அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில்  பாதுகாப்புடன் பலப்படுத்தப்பட்ட அறையில்  வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது,  வழக்கமாக சட்டமன்றத் தேர்தலின்போது நெல்லை மாவட்டத்தில்  65 முதல் 70 சதவீதம் வாக்குகள் தான் பதிவாகியுள்ளது,  இந்த முறையும்  அதேபோன்று சட்டமன்ற தேர்தலில் வாக்குகள்  பதிவாகி உள்ளதாக தெரிவித்த அவர் நெல்லை மாவட்டத்தில் தற்போது பதிவாகி உள்ள வாக்கு சதவீதம் என்பது குறைவானது அல்ல என தெரிவித்தார். வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,  முதல் அடுக்கில் துணை ராணுவப்படை இரண்டாவது அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும் மூன்றாவது அடுக்கில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பலப்படுத்தப்பட்ட அரை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில்  இருக்கும்  வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையின் சிசிடிவி கேமரா காட்சிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் அனைத்து கட்சியினரும் பார்க்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்