சிறப்பாக பணிபுரிந்த அமைச்சுப்பணியாளர்களுக்கு கேடயம்: கமிஷனர் வழங்கினார்

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2021 20:33

சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும், தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணம் வெகுமதி வழங்கி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.

சென்னை நகர  போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மாதம்தோறும் பணியிட  தூய்மை, பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி பரிசுகள் வழங்கி வருகிறார். அதன்பேரில் கடந்த பிப்ரவரி பணியிட அலுவலகத்தை தூய்மையாக பராமரித்து சிறப்பாக கோப்புகளை கையாண்டு பணிபுரிந்த ஆக்ட் மற்றும் வழக்குகள் பிரிவில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதவியாளர் வேல்பாண்டி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ. 2 ஆயிரம்- மற்றும் வெற்றியாளருக்கான சுழற்கோப்பைகளை   வழங்கினார். 2வது பரிசாக HBT-II பிரிவு அலுவலகத்தை தேர்வு செய்து கண்காணிப்பாளர் மணிமேகலை, இளநிலை உதவியாளர் அருண்மொழி, தட்டச்சர் சங்கர் கணேஷ் ஆகியோருக்கு ரொக்கப்பரிசாக ரூ 1 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணைக்கமிஷனர் மல்லிகா மற்றும் நிர்வாகப்பிரிவு துணைக்கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, தலைமையிட துணைக்கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் காவல் அதிகாரிகள், அமைச்சுப்பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.