வடக்கு மண்டல ஐஜிக்கு கொரோனா பாதிப்பு

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2021 20:33

தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி சங்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை வடக்கு மண்டல போலீஸ் ஐஜியாக இருப்பவர் சங்கர். இவரது கட்டுப்பாட்டின் கீழ் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்கள் வருகிறது. இவருக்கு திடீரென கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியானது. சங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் வடக்கு மண்ல ஐஜியாக கூடுதல் பொறுப்பு பொதுப்பிரிவு ஐஜி பெரியய்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரியய்யா அடுத்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெற ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 24-ம்தேதி வரை சங்கர் விடுமுறையில் உள்ளதாகவும் அதுவரை கூடுதல் பொறுப்பை கவனிக்க பெரிய்யயாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தலையொட்டி 6 மாதத்திற்கு குறைவாக ஓய்வு பெற காலஅவகாசம்  இருக்கும் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு அமர்த்தக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறை. ஆனால் வடக்கு மண்டல சட்டம்- ஒழுங்கு ஐஜி பொறுப்பை கவனிக்க பெரிய்யாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்மண்டல காவல்துறை ஐஜி முருகன் மாற்றப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பொறுப்பாக கவனிக்க மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.