பழி வாங்கும் நடவடிக்கையை ரத்து செய்யக் கூறி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 18:53

சிவகங்கை,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட அமைப்பு சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தல், அகவிலைப்படி வழங்குதல், சரண்டர் விடுப்பை ரத்து செய்ததை திரும்ப பெறுதல், புதிய கல்விக் கொள்கையை கை விடல், தொகுபூதிய காலத்தை பணிக்காலமாக அறிவித்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதன்மைக்  கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பாரதி தலைமை வகித்தார். மாநிலப் பொதுகுக்குழு உறுப்பினர் ஜெயராயன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வினோத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் கிருபாகரன் சிறப்புரை வழங்கினார். ஆர்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பீட்டர்,  மாவட்டப்    பொருளாளர் ராஜ்குமார், வட்டாரச் செயலாளர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.