பொட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 18:47

பாளையங்கோட்டை பிப் 23

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையைஉயர்வை கண்டித்து  எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பாக பாளையங்கோட்டை  நூற்றாண்டு மண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் , டீசல் மற்றும் சமையல் எரிவாயு வரலாறு காணத அளவில் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் நெல்லையில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகே மாவட்ட துணைத் தலைவர் கல்வத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் , உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர் . இந்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .