இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 18:46

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அமைந்துள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் முருகேசன் மற்றும் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விபத்தில்லா இளையான்குடி பகுதியை உருவாக்க வேண்டுமென்று மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பு ஆய்வாளர் முருகேசன் அறிவுரை வழங்கினார். மேலும், விரைவில் விபத்து இல்லாத இளையான்குடி உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு மாணவ மாணவியர்கள் தங்களது ஒத்துழைப்பு அவசியம் என்றும் காவல்துறை சார்பு ஆய்வாளர் முருகேசன் பேசினார் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.