பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தனியார் வாடகை கார், சிற்றுந்து ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 18:41

காரைக்குடி,

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தனியார் வாடகைக் கார் மற்றும் சிற்றுந்து ஓட்டுனர்கள் காரைக்குடியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரனா நோய் வெகுவாக குறைந்து வரும் நிலையில், ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பொதுமக்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் மீண்டும் வறுமை நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தனியார் வாடகை கார் மற்றும் சிற்றுந்து  ஓட்டுனர்கள் ,இன்று காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்கள் ஏழுப்பப்பட்டது.