குற்றாலத்தில் குளிக்க 4 நாள் தடை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 21:31

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடர் மழையின் காரணமாக  இன்று 13- ந்தேதி முதல் 4 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.  இதன் காரணமாக தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவே மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் 13.01.21 முதல் 17.01.21 வரை குளிக்க  அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  எனவே பொது மக்கள் நீர்நிலைகள், ஆறுகள், அணைகளில் குளிப்பதற்காக செல்ல வேண்டாம் எனவும் கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கன மழையினை முழுவீச்சில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என  தெரிவித்துள்ளார்