நாகர்கோவில் - சென்னை உட்பட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 18:32

ரெயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் - சென்னை எழும்பூர் உட்பட  சிறப்பு ரெயில்களில் கூடுதல்  பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது'

இது தொடர்பாக, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே தலைமை அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ரெயில் எண்.O6063 சென்னை எழும்பூர் - நாகர்ரோவில் வாராந்திர சிறப்பு ரெயில் இன்று (14-ந் தேதி) முதல் கூடுதலாக ஒரு ஏசி பெட்டியுடன் (3 டயர்) இயக்கப்படும்.

அதே போல் ரெயில் எண். 06064 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்தி சிறப்பு ரெயில் நாளை (15-ந் தேதி) முதல் கூடுதலாக ஒரு ஏசி பெட்டியுடன் (3 டயர்) இயக்கப்படும். ரெயில் எண். 06729 மதுரை - புனலூர் தினசரி சிறப்பு ரெயில் 15-ந் தேதி முதல்  கூடுதலாக ஒரு பொது இரண்டாம் வருப்பு பெட்டியுடன் இயக்கப்படும். மறு மார்க்கமாக இயக்கப்படும் ரெயில் எண் - 06730 புனலூர் - மதுரை தினசரி சிறப்பு ரெயில் 16-ந் தேதி முதல் கூடுதலாக ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.