மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு, தாமிரபரணி ஆற்றில் 53 ஆயிரம் கன அடி தண்ணீர் கடும் வெள்ளப்பெருக்கு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 18:31

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமா மணிமுத்தாறு அருவியில கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையல் , மேலும் மலைப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாபநாசம் , மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து உபரி நீராக 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் எதிரே உள்ள தடாகத்தில் ஆர்பரித்து கொட்டுகிறது. மேலும் மாஞ்சோலைசெல்லும் வழியில் உள்ள பாலத்தை தொட்டு செல்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடியும் , சேர்வலாறு அணையில் இருந்து 7616 கன அடியும் மணிமுத்தாறு அணையில் இருந்து 27471 கன அடியும் என மொத்தம் உபரி நீராக தாமிரபரணி ஆற்றில் 53285 கன தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.  பாபநாசம் அணைப்பகுதியில் 68 மில்லி மீட்டரும் , மணிமுத்தாறு அணைப்பகுதியில் 42 மில்லி மீட்டரும் மலை பதிவாகியுள்ளது.

இதனிடையே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி மணிமுத்தாறு அணைப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அணையின் நிலவரம் , மழை அளவு , அணையில இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு உள்ளிட்ட விபரங்களை கேட்றிந்தார் . பின்னர் வெள்ளம் குடியிருப்புகளை சூழும் நிலையில் மக்களை காப்பாற்ற அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார் .