அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பொங்கல்விழா

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 18:00

பொங்கல் திருநாளை முன்னிட்டு அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில்  பொதுமக்கள் கலந்து கொண்ட  சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

 சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முருகேசன், விஜயகுமார், டேனியல் அருள் சேகர் முன்னிலை வகித்தனர்.  திருமூல நகர் பங்குத் தந்தை பீட்டர் பாஸ்டியன், அதிமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் கலந்து கொண்டனர்.  பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் கரும்பு வழங்கப்பட்டது.  ஏட்டுக்கள் மணிகண்டன், துரைப்பாண்டியன், அஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.