அருமனை அருகே கடையில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
அருமனை போலீஸ் எஸ்.ஐ. மகேஸ்வரராஜ் தலைமையிலான போலீசார் மஞ்சாலுமூடு அருகே முதப்பன்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கிறிஸ்துதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.