கிராமப்பகுதி மக்களுக்காக சிந்தித்து உருவான திட்டம் அம்மா மினி கிளினிக்... அமைச்சர் பெருமிதம்.....

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 17:13

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். 

கிராமப்பகுதிகளில் இருக்கும் ஏழை மக்களுக்கு, நகரங்களுக்கு இணையான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியாரின் சிந்தனையில் உருவான அற்புதமான திட்டம் தான் அம்மா மினி கிளினிக். இங்கு அறுவை சிகிச்சை தவிர மற்ற எல்லா சிகிச்சைகளும் வழங்குவதற்கு உரிய வசதிகள் உள்ளன என்று கூறினார். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.