கனமழை , வெள்ளப்பெருக்கு எதிரொலி , நெல்லை வந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 14:23

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக தாமி்ரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரோக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் நெல்லை வந்தனர்

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை தொடர்வதால் மாவட்டத்தின் பிரதான அணைகளாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணை நிரம்பி அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நெல்லையில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடும் என்பதால் அரோக்கோணத்தில் இருந்து ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில்  தேசிய பேரிடம் மீட்பு படையினர் 50 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்துள்ளனர் . நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துவிட்டு பின்பு மாநகர் பகுதிக்கு ஒரு குழுவாகவும் , அம்பாசமுத்திரம் , விக்கரமசிங்கபுரம் பகுதிக்கு ஒரு குழுவினரும் புறப்பட்டுச் சென்றனர் நெல்லை மாநகர் பகுதியில் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதியான கருப்பந்துறை, குறுக்குத்துறை , வண்ணார்பேட்டை , உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பேரிடம் மீட்பு படையினர் பணிகளை மேற்கொண்டனர் . கொக்கிரகுளம் பகுதியில் ஆற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர் . மேலும் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பதற்கு படகு , மரங்கள் சாய்ந்து விழுந்தால் அதனை அகற்றுவதற்கு கட்டிங் மெஷின் உள்ளிட்ட எந்திரங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் . தொடர்ந்து வெள்ளப்பகுதிகளை கண்காணித்து வருகின்றனர் .