நெல்லை தென்காசியில் கொரோனா குறையுது

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 21:08

நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கும் , தென்காசியில் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வருகிறது. 

தற்போது  நெல்லை மாவட்டத்தில் மாநகர் பகுதியில் 5 பேருக்கும் ,  மானூர் பகுதியில் ஒருவருக்கும் ,  வள்ளியூர் பகுதியில் ஒருவருக்கும் என மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 14,684 ஆக உயர்ந்துள்ளது.  இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 7982 ஆக உயர்ந்து உள்ளது