தென்காசியில் சமூக ஆர்வலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் ,

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 19:41

தென்காசியில் அரசுத்துறையில் நடக்கும் அவலங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர் மீது மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளார் .

தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கேடேஷ். இவர் இளையபாரதம் என்ற அமைப்பை உருவாக்கி சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார் இவர் தென்காசி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டுள்ளார். அரசு மருத்துவமனையில் கொரோனா பெயரில் நடந்த முறைகேடுகள் குறித்தும் தகவல் கேட்டுள்ளார் . இதுபோன்று பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து  அதற்காக குரல் கொடுப்பவர் . இந்நிலையில் இவர் அலுவலகத்தில் இருந்த போது சில மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர் . இதில் பாலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்