நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மழையினால் சேதமடைந்த நியாயவிலைக் கடைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 19:19

நெல்லை சிந்துபூந்துறையில் மழையினால் சேதம் அடைந்த இரண்டு நியாயவிலைக்கடைகளை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இடமாற்றம் செய்வது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

நெல்லை மாநகராட்சி 5வது வார்டு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் கட்டிடங்கள் மோசமான நிலையில் காணப்பட்டு வந்தது. எனவே இந்த இரண்டு கடைகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர் இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணம சிந்துபூந்துறையில் உள்ள இரண்டு நியாய விலை கடை களின் மேற்கூரை சிதலமடைந்து காணப்பட்டதால் அதன் வழியாக தண்ணீர் உள்ளே நுழைந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் மழை நீரில் நனைந்து நாசமாகி விட்டது. இந்நிலையில இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர் ஐயப்பன்  மற்றும் அதிகாரிகள் சிந்துபூந்துறை யில்  உள்ள இரண்டு நியாய விலை கடை களிலும் நேரில் சென்று பார்வையிட்டனர். ரேஷன் கடைகளை எதிரே உள்ள மருத்துவமனை வளாகத்திற்கு தற்காலிகமாக இட மாற்றம் செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். பின்னர் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் .