ஜல் ஜுவன் மிஷன் திட்டம் ஆலோசனை

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 18:15

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜல் ஜுவன் மிஷன் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில்  கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் ஜல் ஜுவன் மிஷன் 

திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பேரூராட்சிகள் உதவி இயக்குநர் விஜய லெட்சுமி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் எழிசை செல்வி உட்பட உதவி இன்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.