உதயநிதி ஸ்டாலின் கைது ராஜபாளையத்தில் திமுக சாலை மறியல்...

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 17:49

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தென்காசி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தலைமையில்    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராஜபாளையத்தில் திமுக கட்சியினர்  காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில், திமுக கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர், ரயில்வே பீடர் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து காந்திசிலை ரவுண்டானாவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.