அம்பாசமுத்திரம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கப்பட்ட போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல்,

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 20:09

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை , தென்காசி மாவட்டப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான்பராக்  உள்ளிட்டவைகள்  நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே  கடையத்தில் கோழி பண்ணை ஒன்றில் போதை பொருட்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்தது, இதன் அடிப்படையில் கடையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் கடையம்  வெய்க்காலிப்பட்டி யைச் சேர்ந்த  அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் மூட்டை மூட்டையாக குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பதுக்கி வைக்கப்பட்ட இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து மூட்டை மூட்டையாக  பறிமுதல் செய்துதனர்.  இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.  மேலும் இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர் மேலும் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு 2 லாரிகளில் கடத்த இருந்த போதை வஸ்துக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் தற்போது கடையத்திலும்   போதை வஸ்துகள் கோழிப் பண்ணையில் இருந்து பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது