ராணுவ வீரர் உயிரிழப்பு , சங்கரன்கோவில் அருகே கிராமமே சோகத்தில் மூழ்கியது

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:44

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதுப்பட்டி கிராமத்தில் சேர்ந்த ராணுவ வீரர் பஞ்சாப்பில்  பணியின் போது  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் புதுப்பட்டி என்ற கிராமத்தைச்  சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது  மகன் குருசாமி(27) . இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பணியின் போது ராணுவ வீரர் குருசாமி அவர் தங்கியிருந்த மாடியில் இருந்து  தவறி விழுந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக  சண்டிகார் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ,இந்த நிலையில் அவரது  குடும்பத்தாருக்கு குருசாமி ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர் . இதையடுத்து உடனடியாக ராணுவ வீரர் தந்தை  கோபாலகிருஷ்ணன் சண்டிகருக்கு புறப்பட்டுச் சென்றார், இந்த நிலையில் ராணுவ வீரர் குருசாமி இறந்துவிட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.