திருவனந்தபுரம் மாவட்டத்தில் புதிதாக 595 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:40

திருவனந்தபுரம் மாவட்டத்தில் புதிதாக 595 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மாவட்டத்தில் கடந்த மூன்றரை மாதங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. புதிதாக 595 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனாவிற்கு 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை மாவட்டத்தில் 48291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 400 பேர்களுக்கு சமூக இடைவெளி இல்லாமையால் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் சுகாதார ஊழியர்கள், 266 பேர் பெண்கள், 329 பேர் ஆண்கள், 182 பேர்களுக்கு நோய் தொற்றியதற்கான காரணம் தெரியவில்லை, 10902 பேர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில்  உள்ளனர். கூட்டுறவு சங்க ஊழியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க குழு அமைத்துள்ளனர். கொரோனா பரிசோதனை தற்போது மாவட்டத்தில் குறைந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தனியார் மருத்துவமனைகள் 10 சதவிகித படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. மாவட்டத்தில் புதிய தனிமைப்படுத்தல் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போத்தன்கோடு பஞ்சாயத்தில் பனிமூலா, வெங்கானூர் பஞ்சாயத்தில் பெரிங்க மலா, விலவூர் பஞ்சாயத்தில் பனங்கோடு ஆகியவை ஆகும்.