காரியாபட்டியில் அதிமுக கட்சி 49ம் ஆண்டு துவக்க விழா

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:36

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு துவக்க விழாவை, கட்சியினர்  கொண்டாடினார்கள். காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். 

நிகழ்ச்சியில் காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் இராமமூர்த்திராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் திருச்செல்வம், நாகர் பாண்டீஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் முத்துப்பாண்டி, சரவணன், தர்மர், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் சின்ன போஸ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ரமேஷ், அம்மா பேரவை செயலாளர் அபிஷேக் ஆதித்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலு, தோப்பூர் ரகுபதி, சரத்  ஆறுமுகம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.