திருவில்லிபுத்தூரில் அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 17:59

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், எம்எல்ஏ சந்திரபிரபா தலைமையில் அதிமுக கட்சியின் 49ம் ஆண்டு துவக்க விழா  கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம்எல்ஏ சந்திரபிரபா மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

நிகழ்ச்சியில், வத்திராயிருப்பு ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன், திருவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய  செயலாளர் முத்தையா, தெற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி, விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் வசந்தி மான்ராஜ், திருவில்லிபுத்தூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது