செவ்வாய்
உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.
சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்
நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் ராஜா-ராணி என்றால், செவ்வாய் - தளபதி ஸ்தானத்தில் இருக்கும் கிரகம், போர்க்குணம் கொண்டது, ஆண் கிரகம், செம்மை நிறம் உஷ்ண கிரகமாகும்.
மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு, விருச்சிகம் சொந்த வீடு.
மகரம் செவ்வாயின் உச்ச வீடு
கடகம் செவ்வாயின் நீச்ச வீடு.
செவ்வாய்க்கு சிம்மம், தனுசு, மீனம் நட்பு ராசிகளாகும்.
செவ்வாய்க்கு மிதுனம், கன்னி பகை ராசிகளாகும்.
செவ்வாய் கிரகம் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள் சஞ்சரிப்பார்.
செவ்வாய் கிரக ஜாதி - சத்ரியன்
செவ்வாய் கிரக தினம் - பவளம்
செவ்வாய் கிரக வாகனம் - அன்னம்
செவ்வாய் கிரக வடிவம் - குறியர் (குள்ளம்)
செவ்வாய் கிரக அதிதேவதை - முருகர்
செவ்வாய் கிரக குணம் - குரூரர்
செவ்வாய் கிரக தானியம் - துவரை
செவ்வாய் கிரக சுவை - துவர்ப்பு
செவ்வாய் கிரக பிணி - பித்தம்
செவ்வாய் கிரக வஸ்திரம் - சிவப்பு
செவ்வாய் கிரக உலோகம் - செம்பு
செவ்வாய் கிரக நிறம் - சிவப்பு
செவ்வாய் கிரக க்ஷேத்திரம் - வைத்தீஸ்வரன் கோயில்
செவ்வாய் கிரக புஷ்பம் - செண்பகம்
செவ்வாய் கிரக தூபதீபம் - குங்கிலியம்
செவ்வாய் கிரக குணம் - ராஜஸம்
செவ்வாய் கிரக சமித்து - கருங்காலி
செவ்வாய் கிரக திக்கு - தெற்கு
செவ்வாய் கிரகத்தின் வேறு பெயர்கள்:
அங்காரகன், அர்த்தன், அரி, ஆரல், உதிரன், குஜன், சேய் பவுமன், மங்களன் வக்கிரன்.
செவ்வாய் கிரகத்திற்கு தான் நிற்கும் இடத்தில் இருந்து 4, 7, 8ம் இடங்களைப் பார்ப்பார்.
செவ்வாயின் குணாதிசயங்கள்:
சகோதரர், பூமி, சுப்ரமணியர், பத்ரகாளி, கோபவான், குயவன், அக்னி முகமாக தொழில் செய்பவர், யுத்தம், ராணுவம், காவல் துறை, ரணகளம், காயம், சாகசம், செம்பு, சிவந்த ரத்தினம், பவளம், துவரை, அக்னி பயம், கருத்து மாறுபாடு கடன், சோரம் போதல், வீரியம், உற்சாகம், வீட்டு வர்க்கம், கம்பளம், பிளவை, துர்மரணம், ஆண்மை, வாணிகம், விமானப் பயணம், நெய்தல், பொதுமேடைப்பேச்சு, அரசாங்க பிரதிநிதி, படை சார்ந்த செயல், போர் வீரர், சேனை தலைமை ஆகிய இவற்றுக்கு செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் மற்றும் காரகத்துவம் பெறுகிறது!
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் செவ்வாய் தோஷம் என்பது திருமண பொருத்தத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கோ, சந்திரன் நிற்கும் ராசிக்கோ 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் நின்றால், அது செவ்வாய் தோஷமாகும். அப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகருக்கு அதே போல் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகரை இணைப்பது உத்தமம். தோஷமும் தோஷமும் இணைந்தால், உத்தமம். தோஷம் - யோகமாகிவிடும். திருமண வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
செவ்வாய்க்கிழமை முருகர் கோயில் சுப்ரமணியர் கோயிலுக்கு சென்று வழிபடுவது உத்தமம்.
செவ்வாய்க்கு உரிய அதிதேவதை முருகர், சுப்ரமணியர் என்பதால் முருக வழிபாடு உத்தமம். தினமும் பாராயணம் செய்ய வேண்டியது சக்தி கவசம், இடும்பன், கடம்பன் கவசம், கந்த சஷ்டி கவசம்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு காளஹஸ்தி திருத்தலத்தில் தோஷ பரிகாரம் செய்வதும் வழிவழியாக கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம்.
செவ்வாய் கிரகத்தின்ஆதிக்கம் பெற்ற மூன்று நட்சத்திரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகியவையாகும்.
பிறக்கும் போது மிருகசீரிடம், சித்திரை அவிட்டம் நட்சத்திரமானால் முதல் தசா, செவ்வாய் தசா. குழந்தையின் ஆரம்ப திசாவாக இருக்கும். மற்ற நட்சத்திரங்கள் என்றால், நட்சத் திரத்திற்குரிய கிரகத்தின் திசா ஆரம்பம். செவ்வாய் 7 வருடங்கள் மொத்த கணக்கு. ஆனால், பிறக்கும் போது எந்த பாதம் என்பதை வைத்து எத்தனை வருடம், மாதம், நாள் கணக்கை திசா புத்தியுடன் அறியலாம்!
செவ்வாய்க்குரிய பரிகார தெய்வம் முருகர். ஒருவருக்கு வீரம், தைரியத்தை தருபவர். செயலாற்றும் சக்தியை கொடுப்பவர். சுபாவத்தில் செவ்வாய் பாவகிரகம். சுபர்களின் சம்பந்தம் பெறும்போது மங்கலம் பெறுவர். அதனால்தான் குருமங்கல யோகம், சந்திர மங்கல யோகம் வருகிறது!
அதாவது குரு, சுக்கிரன், புதன் - வளர்பிறை சந்திரன் பார்வை பெற்றால் நன்மை தரும் கிரகம்.
சனி, ராகு, கேது இவர்களுடன் சம்பந்தப்பட்டால் தீமை தருவார் –
அதே சமயம் சூரியனுடன் சம்பந்தப்பட்டால் நன்மை தருவார்.
ஆஞ்சநேயரை வணங்குவதால் செவ்வாயின் அருள் பெறலாம்! தேன், இனிப்பு பலகாரம் இவருக்கு பிரியமானவை.
செவ்வாய் கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
* சிவப்பு உடை அணிவது நலம். (தேக ஆரோக்கியம் பெறலாம்)
* குரங்குகள், நாய்கள் இவற்றுக்கு உணவு தர வேண்டும்.
* வீட்டில் வேப்ப மரம் வளர்க்க வேண்டும்.
* ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
* கட்டிலில் படுக்கைக்கு கீழ் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மூடிவைத்து காலையில் மலர் செடிகளுக்கு தண்ணீரை ஊற்றுவது நலம் தரும். (நல்ல தூக்கம் வரும்)
* உடன்பிறப்புகளின் குழந்தைகளுக்கு உதவி செய்தல் வேண்டும்.
* விதவைகளுக்கு உதவி செய்தல் அவசியம்.
* மூத்த உடன்பிறப்புகளின் ஆலோசனை பெறுவது நன்மை தரும்.
* செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருப்பது உடல்நலக் கோளாறுகளை நீக்கும்.
* ஆஞ்சநேயரை தினமும் காலையில் வணங்கி வருவது உத்தமம்.
* உடன்பிறப்புகளுக்கு உதவி செய்தல் வேண்டும்.
* வெள்ளி நகைகளை உபயோகிப்பதால் உடல் நலம் பெறலாம்.
செவ்வாய் கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரம் :
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌமஹ் ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்திற்கு முன்பாக ஒன்பது முறை அல்லது 108 முறை
சொன்னால் மங்கலம் உண்டாகும். உள்ளத்தூய்மை உண்டாகும். உடல் உறுதியாகும். மனம் திடமாகும். வீரம் அதிகமாகும். தொண்டு மனப்பான்மை வளரும். பொது அறிவு வளரும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பகை விலகும்.
தமிழில் செவ்வாய் கிரகத்திற்குரிய மந்திரம்:
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே!
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ!
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு...!
நவகிரகங்களில் மூன்றாவதாக இருக்கும் செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தால் நற்பலன்கள் மிகுந்திருக்கும்.
பூமி, வாகன யோகங்களை கொடுக்கக்கூடிய கிரகம், முக்கியமாக களத்திரஸ்தானம், திருமணத்திற்கு செவ்வாயின் தோஷ நிலையை பார்ப்பது அவசியம்.
செவ்வாய்க்குரிய அதிர்ஷ்ட எண். 9.
கிழமைகளில் வெள்ளி - விநாயகர் மகாலட்சுமிக்கு என்றால் செவ்வாய் முருகர் - துர்க்கைக்கு உகந்த சுபக்கிழமைகளாகும்.
சிலர் செவ்வாய்க்கிழமைகளில் நல்ல காரியம் செய்ய யோசிப்பார்கள். அதற்கு போர் குணம் கொண்ட செவ்வாய் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதுதான் காரணம். ஆனால், உண்மையில் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் செவ்வாய் சுப பலம், உச்ச ஆட்சி என்ற நிலையில் இருந்தால் மங்கலம் தரும் கிழமையாக அது இருக்கும்.
கந்த சஷ்டி கவசம் படிப்பது - விளக்கு பூஜை - கார்த்திகை தீபம் - சஷ்டி பூஜை - செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.