முதல் வெற்றி பெற்ற மும்பை, போராடி வீழ்ந்தது கொல்கத்தா!

பதிவு செய்த நாள் : 24 செப்டம்பர் 2020

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்யுமாறு அழைக்க, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி முடிவில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றி பெற்றது.