சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

பதிவு செய்த நாள் : 23 செப்டம்பர் 2020

சார்ஜா,

ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில்  தொடங்கியது.. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஸ்மித் நிலைத்து ஆடி அரை சதம் எடுத்தார்.அவருடன் விளையாடிய சாம்சன் அரை சதம்  எடுத்தார். அவரை தொடர்ந்து வந்த மில்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தனர்.

இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது