ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

பதிவு செய்த நாள் : 22 செப்டம்பர் 2020

துபாய்,

ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர் பிளேயில் விக்கெட் இழபபிற்கு 53 ரன்கள் சேர்த்தது. 9-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பிஞ்ச் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசினார். 10-வது ஓவரை அபிஷேக் சர்மா வீசினார். 

இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.  164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர்

ஐதராபாத் சன்ரைசர்ஸ் 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்த‌து.  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.