சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ்

பதிவு செய்த நாள் : 21 செப்டம்பர் 2020

துபாய்,

ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் துபாயில் இன்றிரவு  2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.

இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார். இறுதியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் நடந்தது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.