சிம்புவால் நான்கு வருடங்களாக படம் தயாரிக்க முடியவில்லை – புலம்பிய தள்ளிய தயாரிப்பாளர்!

13 ஜனவரி 2021, 02:18 PM

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் நாளை வெளியாக உள்ளது. ஆனால்  ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்லவேண்டும் என்று ஒரு புகார் கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் கொரில்லா படத்தின் தயாரிப்பாளரிடம் அடவான்ஸ் வாங்கிவிட்டு சிம்பு படம் நடிக்காமல் போக்குக் காட்டியதால் அவரும் புகார் கொடுத்துள்ளாராம். இந்த பிரச்சனைகள் எல்லாம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து நிற்கிறதாம். இந்த இரண்டு பிரச்சனைகளையும் முடித்தால்தான் ஈஸ்வரன் ரிலீஸாவது உறுதியாகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் “என் மகனின் ஈஸ்வரன் படம் வெளியாக வேண்டும். இது முன்னமே திட்டமிட்டது. ஆனால் மாஸ்டர் படத்திற்காக பலர் ஈஸ்வரனுக்கு எதிராக சதி செய்கிறார்கள். AAA பட நஷ்டத்திற்காக மனநஷ்ட ஈடு கேட்டு கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள்” என வேதனை தெரிவித்துள்ளார்.

டி ராஜேந்தரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள AAA பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ‘அ அ அ படத் தயாரிப்பின் போது நான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து அனைவருக்குமே தெரியும். 4 கதாபாத்திரம் கொண்ட படத்தில், இரண்டில் மட்டுமே நடித்தார். அந்த படத்தை அப்படியே வெளியிடுங்கள் நான் சம்பளம் இல்லாமல் இன்னொரு படம் நடித்துக் கொடுக்கிறேன் எனக் கூறினார். 4 கதாபாத்திரம் கொண்ட படத்தில், இரண்டில் மட்டுமே நடித்தார். ஆனால் அவர் 5 மாதங்களாக என்னை சந்திக்கவே இல்லை.

இதையடுத்து நான் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தேன். என் மேல் உள்ள நியாயத்தை உணர்ந்து ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது பணமாக ஈடுகட்ட வேண்டும் என்றார்கள். அதையடுத்து சிம்பு அடுத்தடுத்து நடிக்கும் 3 படங்களின் சம்பளங்களில் ஒரு தொகையை கொடுக்கவேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் அவ்வாறு கொடுக்கவில்லை. அதனால் தான் மீண்டும் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு தரவேண்டிய 2.40 கோடி ரூபாயை தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். ஈஸவரன் படத்தை நிறுத்த வேண்டும் என்பது நோக்கமில்லை. டி ராஜேந்தர் அடுக்குமொழியில் பேசினால் பொய் உண்மையாகிவிடாது.’ எனக் கூறியுள்ளார்.