விஜய்யை விட விஜய் சேதுபதி ஸ்கோர் செய்த மாஸ்டர்!

13 ஜனவரி 2021, 02:17 PM

மாஸடர் படம் பார்த்தவர்கள் விஜய் சேதுபதியின் நடிப்பை பெருமளவில் பாராட்டி வருகின்றனர். மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும்  மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது.

 சிறப்புக் காட்சி முடிந்து படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் பார்த்த விஜய் ரசிகர் அல்லாத பொதுவான ரசிகர்கள் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதிதான் ஸ்கோர் செய்திருப்பதாக சொல்லியுள்ளனர். பொதுவாகவே சிறப்பான நடிப்பை வழங்கும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் என்பதால் புகுந்து விளையாடி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.