13 ஜனவரி 2021, 12:50 PM
நாகர்கோவிலில் சூட்டிங் கன்னியாகுமரி மாவட்டத்தில் சினிமா படப்பிடிப்பு எடுத்தால் கொள்ளை அழகுதான்.பைரி திரைப்படத்தின் ஷூட்டிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. கதாநாயகன் சையத் மஜீத் புறா ரேஸில் வெற்றி பெற்ற கோப்பையுடன் ஜீப்பில் ஜமாய்த்து கொண்டிருந்தார். பொங்கல் ஸ்பெஷல் பேட்டிக்காக தொடர்பு கொண்டபோது.....
கே: இயற்பெயர்
சையத் முகமது
கே: வீட்டில் சுதந்திரமா?
அப்பா அப்துல் மஜீத் டெய்லர், அம்மா அப்துல் பீவி, அம்மா, அப்பா சினிமாவுக்கு முழு ஆதரவு, சூழ்நிலை கஷ்டமாக இருந்தாலும் என்னுடைய மகன் சாதிப்பான் என்று பெரும் நம்பிக்கை. இது செய், இது செய்யாதே என்று தடை செய்தது இல்லை. சாப்பிட வழி இல்லாத போது கூட என்னை சுதந்திரமாக வளர்த்தார்கள்.
கே: நடிப்பு உங்களிடம் மட்டுமா?
நான் தான் மூத்த மகன். 3 தங்கைகள், 2 தம்பிகள் என்று பெரிய குடும்பம். 2 தங்கைகளுக்கு திருமணம் ஆகி உள்ளது. ஒரு தங்கை கல்லூரி படித்து வருகிறாள். 2 தம்பிகளும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். நான் மட்டுமே நடிக்க ஆசைப்பட்டேன்.
கே: நடிகராவதற்கு முன் கல்லூரியில் கலக்கி இருப்பீங்களே!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை. மானாமதுரை சிஎஸ்ஐ உயர்நிலை பள்ளியிலும், ராஜகம்பீரம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளி படிப்பை முடித்தேன். பி.சி. ஏ. 2006 ம் ஆண்டு மதுரையில் உள்ள எஸ்.எல்.எஸ்.எம்.ஏ.வி.எம்.எம். ஆயுர வைசிய கலை கல்லூரி.
கே: நடிப்பதற்கு எடுத்த முயற்சி?
பதில்: பள்ளி பருவ காலமான சின்ன வயதில் மேடை நடனமும், கல்லூரியில் படிப்பை முடித்த உடன் சென்னைக்கு சென்று பகுதி நேரமாக ஹோட்டலில் பில்லிங் போடும் வேலையை செய்து வந்தேன். அதன் பிறகு தனியார் வங்கியில் மார்க்கெட்டிங் வேலை செய்தேன். கூத்து பட்டறை தியேட்டர் லேப் நடிப்பு பள்ளியில் மாஸ்டர் ஜெயராவ் பயிற்சி அளித்தார். அதன்பிறகு மாஸ்டர் அருண்மொழியின் நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றேன். 2011 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை தனியார் தொலைக்காட்சியில் குறும்படங்களில் நடித்தேன். 2020 ம் ஆண்டு கதாநாயகனாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கே: காலடி வைக்கும்போதே
கதாநாயகன் ஆகிவிட்டீர்கள்!
முதல் படம் எது? கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் புறா பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படமான பைரி படம் தான் என்னுடைய முதல் படம்.
கே: பைரியில் நாயகி யார்?
கொஞ்சம் சொல்லுங்களேன்..
கடந்த மாதம் ஷூட்டிங் ஸ்பாட் வந்திருந்தால் நாயகியை அறிமுகம் செய்து வைத்திருப்பேன்.
அடுத்த பேட்டியில் அவரை சந்திக்கலாம் ஓ .கே.யா?
கே: வேறு என்ன திறமைகள்?
நடனம், மேடை பேச்சு, மிமிக்கிரி, புத்தகங்கள் வாசிப்பது, சிறுகதை தொகுப்புகள்
கே: சூட்டிங் போக மீதி நேரத்தில் என்ன
பொழுதுபோக்கு?
சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நண்பர்களோடு வெளியில் பயணம் செய்வது. ஒரே ஜாலிதான்.
கே: சிவகங்கைகாரருக்கு குமரி பிடித்துள்ளதா?
குமரி என்றாலே அழகுதான். நிறைய இடங்கள் சுற்றி பார்த்தேன். இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்குது. ஊரும் மக்களும் செமமம..
கே: பிக்பாஸ் இரண்டு வரிகள் கமெண்ட்?
பிக்பாஸ் குறித்து கருத்து
நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சி. கமல் சார் வரும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கண்டிப்பாக பார்ப்பேன்.
கே: பார்த்ததில் பிடித்தது யார் யார்?
நடிகர்களில் சின்ன வயதில் பிடித்தது மரியாதை உள்ளவர் விஜயகாந்த்,
இப்போ... விக்ரம், விஜய் சேதுபதி, தனுஷ், சூர்யா. நடிகைகளில் ஜோதிகா, நயன்தாரா....
கே: பிற மொழிகளில் நடிக்க ஆர்வம்?
தாய் மொழி தமிழ் ரொம்ப பிடிக்கும்.. ஏற்றி இறக்கி வசனம் பேசுவதே தனி கலைதான். பிற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தால் படிக்க பழகிக் கொள்ளலாம்..
கே : லேட்டஸ்டா பிடித்த படம்?
சூரரை போற்று வித்தியாசமான ஒரு தமிழ் படம்.
கே: திருமணம் எப்போது?
திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மனைவி ஜீனத்தூஸ் ஜாகிரா, மூத்த மகன் ஹாரீத் 5 வயது, இளையமகன் ஆதீக் 2 வயது...
கே: பைரி படத்தின் டைரக்டர் யார்?
சொந்த ஊர் எது?
ஜாண் கிளாடி, நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள அருகுவிளை நாகர்கோவில் சினிமா சூட்டிங்கின் போது தினமலர் நிருபர் குழுவின் விசேஷ பேட்டி