இரண்டு வருடமாக பிரச்சனையில் சிக்கிய வெற்றிமாறன் படம்.. 27ம் தேதி வெளியாகிறது

21 நவம்பர் 2020, 10:57 AM

தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி விடும். இல்லையென்றால் தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீஸ் தள்ளிக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் வெற்றிமாறன் படம் ஒன்று கடந்த இரண்டு வருடங்களாக தியேட்டர் கிடைக்காமல் தடுமாறி வந்த நிலையில் தற்போது ரிலீஸ் உறுதி ஆகிவிட்டது.

வெற்றிமாறன் இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் அவர் தயாரித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. வெற்றிமாறன் தயாரிப்பில் சன் மியூசிக் பிரபலம் சுரேஷ் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன்.

கடந்த வருடத்திலிருந்து தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளித் தள்ளி சென்று கொண்டிருந்த காவல்துறை உங்கள் நண்பன் படம் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகாததால் காவல்துறை உங்கள் நண்பன் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என வெற்றிமாறன் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.