ராஜஸ்தான் ராஷி கண்ணாவை மயக்கிய பொள்ளாச்சி

20 நவம்பர் 2020, 11:27 PM

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதற்கப் பிறகு 'அடங்க மறு, அயோக்யா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 'அரண்மனை 3, மேதாவி, துக்ளக் தர்பார், சைத்தான் கா பச்சா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

'அரண்மனை 3' படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ராஷிகண்ணா. இதற்கு முன்பு அவர் பொள்ளாச்சிக்குச் சென்றிருக்க மாட்டார் போலிருக்கிறது.

தமிழ் சினிமாவில் அதிகமான வெளிப்புறப் படப்பிடிப்பு நடக்கும் இடமான பொள்ளாச்சியின் இயற்கை அழகில் ராஷிகண்ணா மயங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து, “நான் நீல வானங்களைப் பார்க்கிறேன், மற்றும் வெள்ளை மேகங்கள்...பிரகாசமான ஆசீர்வதிக்கப்பட்ட வானம், இருண்ட புனிதமான இரவு, இயற்கை பூக்கும், ஆறுகள் பாயும், எனக்காகவும், உங்களுக்காகவும், எனக்கு நானே யோசித்துக் கொள்கிறேன், என்ன ஒரு அற்புதமான உலகம், 'பொள்ளாச்சி'...என ஆங்கிலத்தில் ஒரு கவிதையையே எழுதிவிட்டார்.