பிறந்தநாளை முன்னிட்டு புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் லாரன்ஸ்!

29 அக்டோபர் 2020, 09:16 PM

தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமாகி இயக்குநர் அவதாரம் எடுத்து பல சமூக சேவைகளும் செய்து வருபவர் நடிகர் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு ‘ருத்ரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ருத்ரன்’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ராகவா லாரன்ஸ் - ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும். ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ருத்ரன்’ பட டைட்டில் லுக் வெளியாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.