பிரபல நடிகரின் திரைப்படத்தில் கமிட்டான ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

29 அக்டோபர் 2020, 09:06 PM

மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் இணைந்துள்ள படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘புலிமுருகன்’ படத்திற்கு கதை எழுதிய உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் இந்தப் படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.  

ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ் என்டர்டெய்னராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற இருக்கிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.